நமது உள்ளங்களில் இருந்து தலையுச்சிவரை அநேகம் நரம்புக் கற்றைகள் உள்ளன. நாம் சுறுசுறுப்பாக அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருந்தால் (தோப்புக்கரணத்தால்) அந்த நரம்புக்கற்றைகள் சுருங்கிச் சோர்வடையாமல் ர்ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்கு பலம் கொடுக்கும். ஆந்த ர்ரத்தம் மூளைக்குச் சென்றால் மனதில் சாந்தமான நினைவுகள் மலரும்.

நாம் தோப்புக்கரணம் போடும் போது உடல் அசைவில் சுஷீம்னா என்ற நாடி தட்டி எழுப்பப்படுகிறது. இரு கரங்களில் நெற்றிப்பொட்டுக்களில் குட்டிக் கொள்ளும் போது ஸஷஸ்ராரம் என்ற இடத்தில் இருந்து யோகிகளுக்கு அமிர்தம் சிந்தும் விநாயக உபாஸனையின் மூலம் சுஷீம்னா நாடி அமிர்தகலசம் இரண்டும் ஒருங்கே இயங்குவதனால் பூரண பலன்களை அடைய முடிகிறது என்பர்.

எந்தத் தேவதையை வணங்கத் தொடங்கினாலும் முதல் விநாயகரை தியானித்து சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூறி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்னரே வணங்க வேண்டும் ர்வ்வாறு குட்டிக் கொள்வதால் ப்ரம்மரந்த்ரத்தில் அமிர்தம் பெருகி நாடிகளில் பாய்ந்து உபாசர்களுக்கு சோம்பல் முதலிய அவகுணங்களை விரட்டி நல்ல மனநிலையை அளிக்கிறது. மூலக்கனல் என்று சொல்லப்படுவதே சுஷீம்னா நாடி. இது மனித சரீரத்தில் அடி வயிற்றின் கீழ் ஒங்கார ரூபத்தில் அமைந்து செயலாயிற்றுகிறது.

இதைத் தட்டிச் செயல்படுத்தி மேல் நோக்கி ஸஷஸ்ரார மண்டலம் வரை செலுத்தி சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே அதை நிலைநிறுத்திக்கொண்டால் மனிதன் தன் நிலைமறந்து ப்ரும்மத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் பேரானந்தத்தைக் காண்பான். இந்த நாடியை செயல்படுத்துவதற்கு – தட்டி எழுப்புவதற்கு மூலாதாரத்தில் அளவில்லாத உஷணத்தை உண்டு பண்ணவேண்டும் அதற்கு மனத்தை ஒரே நிலையில் ஜக்கியப் படுத்தி நெடுங்காலம் ஜபதபங்கள் புரிய வேண்டும் அதிக உஷ்ணமான பொருட்களை உபயோகித்து பூசை முதலியக புரிதல் மறைமுகமான யோகத்தீமுட்டு என்று உணர்த்தவேயாகும் மூலாதாரத்திலுள்ள கஷம்னா நாடி கணபதி என்பதாலே நமது ரிஷிகள் சாஸ்திர விற்பனர்கள் ஆகியோர் தாவர வர்க்கத்திலேயே மிக மிக உஷ்ணமான அறுகம் புல் வெள்ளெருக்கு வன்னிப்பத்திரம் ஆகியவை கணபதி பூசைக்கு உகந்தவை எனக் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் விநாயக வழிபாடு மரபாக அமைத்துள்ளார்கள்.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

Advertisements

அமெரிக்காவில் தோப்புக்கரணம் பற்றி  ஆராய்ச்சிக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடும் வழக்கமம் உள்ளது.

தோப்புக்கரணம் போடுவது குறித்து புராண நிகழ்ச்சி ஒன்று கூற்படுகிறது.

ஒரு முறை விநாயகர் தனது மாமா மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விளையாட்டாக பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார். அதிர்ந்து போனார் மகாவிஷ்ணு.

விநாயகர் பலம் பொருந்தியவர். அவரை மிரட்டி சக்கரத்தை வாங்க முடியாது. அவரை சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரம் விழுந்தால் சக்கரத்தை எடுத்துக் கொண்டுவிடலாம் என்று மகாவிஷ்ணு ஐடியா போட்டார்.

தன் நான்கு கைகளாலும் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதைப் பார்த்த விநாயகருக்கு சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்துசிரித்தார் விநாயகர். அப்போது வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகா விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

தோப்புக்கரணம் போட்டதால் மகா விஷ்ணுவுக்கு அவரது பொருளைத் திருப்பித் தந்தார். அதே போல நாமும் தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் வேண்டிய வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

பிறப்பு என்று ஒன்று நிகழ்ந்து விட்டால் மரணம் என்பது நிச்சயம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; மரணத்திற்கு பிறகு தான் நம் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான்.

ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

நம்மோ நோக்கி வரும் துன்பங்களால் மனம் பாதிப்படையாத நிலையை அடையும் வரையில் எப்படி ஆனந்தம் வரும்?

நாம் சுதந்திரமாக இல்லாத வரையில் , நம்மை நோக்கி வரும் துன்பங்களை உதாசீனம் செய்யும் வலிமை இல்லாதவராக இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்படி வரும்?

ஆனந்தம் ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறது. ஆனால் அறியாமையினால் உண்டான கவலை அதை மறைக்கிறது. கவலையை உதறும் அறிவைப் பெறும்போது நாம் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.

கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.

பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

Posted by: shasunder | October 10, 2011

ஆன்மீகம் என்பது என்ன?

மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன  நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.

இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள்  தங்களை வந்து தாக்கும் நிலையிலே  உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி,   மூப்பு, சாக்காடு ஆகியவை.
இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.
வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும்,  பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?

நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும்,  பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம்.  All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all,  (irrevokabaly removed) from us.
இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.

நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.

தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?
ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?
பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?
நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன்.

உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி –  எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.

அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோ, ஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .
இத‌ற்க்கு  SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி’ என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

தாலியை பற்றி பல கருத்துகள் நிலவினாலும், அவற்றுள் அறிந்தவை சில.

ஆரம்பத்தில் பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்… பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்… பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது.

தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதைஉள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு  அணியப்படுகிறது.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

Shanmuga Sundaram D |Project Manager |

INFOGNANA (IG) Solutions

Older Posts »

Categories